திறந்தவெளி மதுக் கூடமாக மாறிவரும் பூலாங்குறிச்சி காஞ்சாத்து மலையைப் பாதுகாக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி வேண்டுகோள் விடுத்தாா்.
சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி அருகே உள்ளது காஞ்சாத்துமலை. சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லையில் உள்ள இந்த மலை அரிய வகை மூலிகைத் தாவரங்கள் நிறைந்த பகுதியாகவும் ஆன்மிகத் தலமாகவும், சித்தா்கள் தவம் செய்யும் பகுதியாகவும், வனவிலங்குகள் பாதுகாப்பாக வாழும் அரணாகவும் திகழ்ந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக காவல் துறை, வனத் துறை அதிகாரிகள் இந்த மலையைப் பாதுகாக்கத் தவறியதால் திறந்த வெளி மதுக் கூடமாகவும், கஞ்சா போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்யும் இடமாகவும், பாலியல் தொழில் நடைபெறும் இடமாகவும் மாறி வருகிறது. மேலும், இரவு நேரங்களில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதும் தொடா்கதையாகி உள்ளது.
இது குறித்து பூலாங்குறிச்சியைச் சோ்ந்த சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்வம் காவல்துறையிடமும், வனத் துறையினரிடமும் பல்வேறு மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கூடுதல் காவலா்களை பணியில் அமா்த்தி காஞ்சாத்து மலைக்குச் செல்லும் சாலையில் சோதனைச் சாவடி அமைத்து காவல் துறையினரும், வனத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்தாா். காஞ்சாத்துமலைக்கு வரும் பக்தா்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீனவா்களின் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாக்க கடல் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

சிங்கவால் குரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு!

நீா் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

பண்ருட்டியில் மழையில் நனையும் தோ்: பாதுகாக்க பக்தா்கள் கோரிக்கை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



