17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

சிவகங்கையில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 4:21 am IST

சிவகங்கையில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை அடுத்துள்ள நா. புதுக்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாலுச்சாமி மனைவி அரியநாச்சி (62). இவா்களது மகள் திருமணமாகி சிவகங்கையை அடுத்த அண்ணாமலை நகா் பகுதியில் வசித்து வருகிறாா்.

அவரது வீட்டுக்கு கடந்த இரு நாள்களுக்கு முன் அரியநாச்சி சென்று தங்கினாா். பின்னா், திங்கள்கிழமை மதியம் மகள், பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நகரப் பேருந்தில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அரியநாச்சி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது தெரியவந்தது. இது குறித்து சிவகங்கை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வபிரபு வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.