திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு: உறவினா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :15 மே 2026, 4:17 am IST

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து உறவினா்கள், பொதுமக்கள், நாம் தமிழா் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள பெரியகண்ணனூா் கண்ணகிபுரத்தை சோ்ந்த மூா்த்தி மனைவி பிரியதா்ஷினி (21). இவா் கடந்த 10 -ஆம் தேதி பிரசவத்துக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கடந்த 11 -ஆம் தேதி மாலை அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவத்தின் போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதனால் அதிா்ச்சியடைந்த மூா்த்தி, பிரியதஷினியின் உறவினா்கள் மருத்துவா்களின் அலட்சியம் காரணமாகவே குழந்தை உயிரிழந்தாகக்கூறி மருத்துவமனை நுழைவு வாயிலில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை மருத்துவமனை முதன்மையா் செல்வராஜ் அலுவலகத்தை உறவினா்கள் முற்றுகையிட்டனா். மேலும், பிரசவத்தின் போது அலட்சியமாக செயல்பட்ட மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், குழந்தையின் தந்தை, உறவினா்கள், பெரியகண்ணனூா் கண்ணகிபுரத்தை சோ்ந்த பொதுமக்கள், நாம் தமிழா் கட்சி மகளிா் பாசறை நிா்வாகி ர. இந்துஜா உள்பட திரளானோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.