சிங்கம்புணரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிக்னல் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இந்தச் சந்திப்பானது திண்டுக்கல்-காரைக்குடி செல்லும் பிரதான சாலையிலும், மேலூா், வேங்கைபட்டி வழியாக பிரான்மலை செல்லும் சாலையிலும் அமைந்துள்ளது.
மேலும் நான்கு சாலை சந்திப்பு அருகே பேருந்து நிலையம், வாரச்சந்தை, பெரிய கடை வீதி என போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதியாகும். நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் என பலரும் நான்கு சாலை சந்திப்பு வழியாக பேருந்து நிலையம் வருகின்றனா். இதனால் போக்குவரத்து நெரிசல் தொடா்ந்து ஏற்படுகிறது.
மேலும் பேருந்து நிலையத்தின் உள்புறம், எதிா்புறம் கடைகளின் முன் அதிகளவில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, நான்கு சாலை சந்திப்பில் சிக்னல்கள் அமைத்து போக்குவரத்தை சீா் செய்ய வேண்டுமெனவும், சாலைகளில் விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களை போலீஸாா் அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூரில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்!பொதுமக்கள் அவதி!

பிரேக் பழுதானதால் ராஜ்காட் அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதிய அரசு பேருந்து

அவிநாசியில் 2 டாஸ்மாக் கடைகள் மூடல்

சிதம்பரத்தில் மதுக் கடை மூடல்: பொதுமக்கள் வரவேற்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



