திருப்பத்தூா் அருகே சாலை விபத்தில் அடுமனை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள மீமிசலைச் சோ்ந்தவா் ராஜகோபால் (50). இவா் சிங்கம்புணரி அருகேயுள்ள காளாப்பூரில் அய்யங்காா் அடுமனை கடை நடத்தி வந்தாா். இவா் தனது சொந்த ஊரான மீமிசலிலிருந்து இரு சக்கர வாகனத்தில் காளாப்பூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா். திருப்பத்தூா் அருகே சிங்கம்புணரி சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பில் நிலை தடுமாறி மோதியதில் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் இவரது உடலை மீட்டு, கூறாய்வுக்கு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருப்பத்தூா் காவல் ஆய்வாளா் பிரவீன்டேனி சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். இந்த விபத்து குறித்து கண்டவராயன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் பாதயாத்திரை பக்தா் உயிரிழப்பு
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

