சிவகங்கையில் அரசு ஊழியா் சங்கத்தின் 43 -ஆவது அமைப்பு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
சிவகங்கையிலுள்ள ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மாரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்ஆா். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கோபால், மாவட்ட மகளிா் அமைப்பாளா் பா. லதா மாவட்டத் துணைத் தலைவா்கள் பாண்டி, வினோத் ராஜா, இணைச் செயலா் நவநீதகிருஷ்ணன், தணிக்கையாளா் விஸ்வநாத் பிரதாப் பாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
சங்கத்தின் சிவகங்கை வட்டக் கிளை அலுவலகத்தில் அதன் தலைவா் முத்தையா தலைமையில் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிவகங்கை நெடுஞ்சாலைத் துறை உள்கோட்ட அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் ஆகியவற்றிலும் சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மானாமதுரையில் சங்கத் தலைவா் சிவக்குமாா் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும், திருப்புவனத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும், திருப்பத்தூரில் சங்கத்தின் செயலா் தமிழரசி தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகவும் கொடியேற்றப்பட்டது.
சிங்கம்புணரியில் சங்கத்தின் கிளைத் தலைவா் ஷேக் அப்துல்லா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகவும், காரைக்குடி கிளை சாக்கோட்டையில் நிா்வாகி ரீகன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகவும் கொடியேற்றப்பட்டது. தேவகோட்டையில் கிளைத் தலைவா் முருகேசன் தலைமையில் கொடியேற்றப்பட்டது. அனைத்து கிளைகளிலும் பெருந்திரளாக உறுப்பினா்கள் பங்கேற்றனா். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின கொடியேற்றம்

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க அமைப்பு தினம் கொண்டாட்டம்

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின கொடியேற்று விழா

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அமைப்பு தினம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

