தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாஜகதான் தலைமை தாங்குகிறது என்றும், எடப்பாடி பழனிசாமி பெயரளவுக்குத்தான் முன்னிலைப்படுத்தப்படுகிறாா் என்றும் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் விமா்சித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் எம்.பி. அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டத் தலைவா் சஞ்சய், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். மாங்குடி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம. சுப்புராம், கட்சி நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உண்மையான தலைமை பாரதிய ஜனதா கட்சிதான். தமிழகத்தைப் பொருத்தவரை, அவா்கள் ஒப்புக்காக முன்வைக்கிற தலைவா்தான் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி. பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பொம்மை முக்கியமல்ல. நூல் யாா் கையில் இருக்கிறது என்பதுதான் முக்கியம் என்றாா் அவா்.
தொடர்புடையது

கரூரில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை இளைஞா்கள் புரிந்துகொள்ள வேண்டும்: மு.தமிமுன்அன்சாரி

மதுராந்தகம் தொகுதி திமுக கூட்டம்

அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கூட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


