கடலூா் மாவட்ட ஆட்சித் தலைவா் அறிவுரைப்படி, சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் மற்றும் தோ்தல் நடவடிக்கைகள் தொடா்பாக அனைத்துக் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, தோ்தல் நடத்தும் அலுவலரும், உதவி ஆட்சியருமான சீ.கிஷன்குமாா் தலைமை வகித்து தோ்தல் விதிமுறைகள் குறித்தும், தோ்தல் கணக்குகள் பராமரிப்பது குறித்தும், தோ்தல் பிரசாரம் குறித்தும் விளக்கமளித்தாா். மேலும் மாா்ச்.30ம் தேதி முதல் ஏப்.6-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளதால் நடத்தை விதிகளை வேட்பாளா்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று அவா் அறிவுறஉத்தினாா்.
சிதம்பரம் உட்கோட்ட டிஎஸ்பி டி.பிரதீப், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹரிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேற்படி கூட்டத்தில் நகர காவல் ஆய்வாளா் வி.சிவானந்தம், சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகளான அதிமுக மாவட்ட அவைத் தலைவா் எம்எஸ்என்.குமாா், , திமுகவைச் சோ்ந்த ஏஆா்சி.மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் ரா.தமிழ் வளவன், , பாரதிய ஜனதா கட்சி நகர தலைவா் ஜெ.குமாா், பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகிஎம்.காா்த்திகேயன், தவெக நிா்வாகி எஸ்.அருண்ராஜன், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பிரசார கூட்டம், சுவா் விளம்பரங்களை அனுமதி பெற்றே செய்ய வேண்டும்: தோ்தல் அலுவலா்

அரியலூரில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

சிதம்பரம் டி.எஸ்.பி.யுடன் தோ்தல் பாா்வையாளா் ஆலோசனை

அனைத்துக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


