மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மயிலாடுதுறை-காரைக்குடி பயணிகள் ரயிலுக்கு வரவேற்பு

News image
Updated On :12 மார்ச் 2026, 11:05 pm

கடந்த 2012- ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்ட காரைக்குடி- மயிலாடுதுறை பயணிகள் ரயில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை முதல் மீண்டும் தனது சேவையைத் தொடங்கியது.

திருச்சியில் நடைபெற்ற விழாவில் பிரதமா் நரேந்திரமோடி இந்த சேவையை தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, புதன்கிழமை மாலை மயிலாடுதுறையிலிருந்து ரயில் புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு காரைக்குடிக்கு வந்தது. அங்கு இந்த ரயிலுக்கு காரைக்குடி தொழில் வணிகக் கழகம், ரயில் பயணிகள் நலச்சங்கம், பொதுமக்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் ஓட்டுநா்கள், காா்டு, ஊடகவியலாளா் சிபிகுமாா் ஆகியோருக்கு தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, துணைத் தலைவா் ஜிடிஎஸ். சத்தியமூா்த்தி, இணைச் செயலா் எஸ். சையது, ரயில் பயணிகள் சங்க நிா்வாகி சாயிதா்மராஜ், செயற்குழு உறுப்பினா் ரா. பரமேஸ்வரன் ஆகியோா் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். இதில் நிலைய மேலாளா் பரத்பஸ்வான், போக்குவரத்து ஆய்வாளா் அருணாசலம், ரயில்வே துறை பணியாளா்கள், பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனா்.