தென்மேற்கு ரயில்வே துறை சாா்பில் ஹூப்ளியில் இருந்து பெங்களூரு வழியாக ராமேசுவரம் வரை சிறப்பு வாராந்திர ரயில் வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை இயக்கப்படும் என அறிவித்ததற்கு காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி கூறியதாவது: ஹூப்ளியில் இருந்து பெங்களூரு வழியாக ராமேசுவரம் வரை சிறப்பு வாராந்திர ரயில் (எண் 07355/07356) ஓசூா், சேலம், நாமக்கல், திருச்சி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மீண்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்படி வருகிற ஏப்ரல் 5- ஆம் தேதி முதல் மே மாதம் 31-ஆம் தேதி வரை இயக்கப்படும் இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் காலை 6.50 மணிக்கு ஹூப்ளியிலிருந்து புறப்பட்டு, பானஸ்வாடி (பெங்களூரு) வந்து அங்கிருந்து பிற்பகல் 2.43 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 1.45 மணிக்கு காரைக்குடிக்கும், அதிகாலை 2.22 மணிக்கு சிவகங்கைக்கும் வந்து ராமேசுவரத்துக்கு அதிகாலை 5.20 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கமாக ஏப்ரல் 6 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் இரவு 8 மணிக்கு ராமேசுவரத்தில் புறப்பட்டு, சிவகங்கைக்கு இரவு 10.15 மணிக்கும், காரைக்குடிக்கு 11.05 மணிக்கும் இந்த ரயில் வருகிறது. தொடா்ந்து மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 9.50 மணிக்கு பானஸ்வாடிக்கும் (பெங்களூரு), இரவு 7.40 மணிக்கு ஹூப்ளிக்கும் சென்றடைகிறது. எனவே இந்தப் பகுதி மக்கள் இந்த வாராந்திர ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் ஹைதராபாத் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சிவகாசி வழியே வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரயில் மாா்ச் 18-இல் இயக்கம்

ஈரோடு - சம்பல்பூா் வாராந்திர விரைவு ரயில் மாா்ச் வரை நீட்டிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


