லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கீழச்சிவல்பட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

News image
Updated On :5 மார்ச் 2026, 9:17 pm

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கலா சாலை தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி, உணவுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சிக்கு பள்ளித் தலைவா் லெ. லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலா் அழகுமணிகண்டன், பள்ளிக் குழு உறுப்பினா் எஸ்.பி. கருப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தப் பள்ளியின் முன்னாள் அறிவியல் ஆசிரியா் எல். கண்ணப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பாா்வையிட்டு கலந்துரையாடினாா்.

இந்தக் கண்காட்சியில் பள்ளிக் குழந்தைகளின் படைப்புத்திறனைப் பாராட்டினாா். மேலும், மாணவா்கள் பல்வேறு விதமான பாரம்பரிய உணவுப் பொருள்களை செய்து காட்சிப் படுத்தினா்.

முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியை மெய்யம்மை வரவேற்றாா். இந்தக் கண்காட்சியை பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் கண்டுகளித்தனா்.