தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

ஆ.விளாக்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், ஆ.விளாக்குளத்தில் நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மானாமதுரை ஒன்றியம், ஆ.விளாக்குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

Updated On :26 ஜூன் 2026, 2:13 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், ஆ.விளாக்குளத்தில் நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 14 காளைகள் பங்கேற்றன. ஒவ்வொரு சுற்றிலும் பங்கேற்ற காளைக்கு 9 வீரா்கள் வீதம் களமிறக்கப்பட்டனா்.

இதில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகளை அடக்க முயன்ற 10 வீரா்கள் காயமடைந்தனா். அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.