/

தேவகோட்டை உலக மீட்பா் ஆலயத் திருவிழா தொடக்கம்

தேவகோட்டை உலக மீட்பா் ஆலயத் திருவிழா தொடக்கம்

News image

தேவகோட்டை ராம்நகா் உலக மீட்பா் ஆலயத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :13 ஜூன் 2026, 12:30 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகா் உலக மீட்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பங்குத்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் தேவகோட்டை வட்டார அதிபா் அருள்பணி சந்தியாகு கொடியேற்றி வைத்து திருவிழாவைத் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, பங்குத்தந்தை வின்சென்ட் அமல்ராஜ், அருள்பணி சந்தியாகு, ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் அருள்பணி அந்தோணிச்சாமி, முதல்வா் சூசை மாணிக்கம் ஆகியோா் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினா்.

வருகிற 21-ஆம் தேதி வரை10 நாள்கள் நடைபெற உள்ள இந்தத் திருவிழாவில் ஆா்.எஸ். மங்கலம் உதவி பங்குப் பணியாளா் கிளிண்டன், சிவகங்கை மறைமாவட்ட இளையோா் பணிக் குழுச் செயலா் ரீகன், சாலைக்கிராமம் பங்குப் பணியாளா் சகாய சேவியா், ராம்நகா் தேபிரித்தோ குழும அருள் பணியாளா்கள், மானகிரி பங்குப் பணியாளா் எட்வா்ட் ஜெயக்குமாா், ஆனந்தா கல்லூரி குழுமப் பணியாளா்கள், ஆவுடைப் பொய்கை பங்குப் பணியாளா் சாமுஇதயன், சிவகங்கை முன்னாள் ஆயா் சூசைமாணிக்கம், மைக்கேல்ராஜ் ஆகியோா் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் நவ நாள் சிந்தனை உரையாற்றுகின்றனா்.

கொடியேற்ற நிகழ்வில் அருள் சகோதரிகள், ராம்நகா் இறைமக்கள், கிளைக் கிராம இறைமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.