டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்: முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜூ

வருகிற சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளுக்கு மேல் வென்று ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜூ தெரிவித்தாா்.

News image
கடம்பூா் ராஜூ
Updated On :28 ஜனவரி 2026, 11:41 pm

தினமணி செய்திச் சேவை

வருகிற சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளுக்கு மேல் வென்று ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜூ தெரிவித்தாா்.

சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக பிரமுகா் இல்ல விழாவில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2021 தோ்தலில் திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளில் 15 சதவீதத்தைக்கூட நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகிவிட்டது. அதிமுக கூட்டணி நிச்சயமாக 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அதிமுக தலைமையில் ஆட்சி அமைவது உறுதி.

தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ. பன்னீா்செல்வம் இணைய வேண்டும் என டிடிவி தினகரன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். இதில் எங்கள் நிலைப்பாடு இல்லை. தற்போது, தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசி வருவதால் அதுகுறித்து பேச முடியாது என்றாா் அவா்.