லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஏ.ஐ. தொழில்நுட்பத்தைக் கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை: பேராசிரியா் கு.ஞானசம்பந்தன்

ஏ.ஐ. தொழில்நுட்பத்தைக் கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை என பேராசிரியா் கு. ஞானசம்பந்தன் பேசினாா்.

News image

சிவகங்கை கற்பகா மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் குழந்தைக்கு பரிசளித்த பேராசிரியா் கு. ஞானசம்பந்தன்.

Updated On :28 பிப்ரவரி 2026, 9:22 pm

ஏ.ஐ. தொழில்நுட்பத்தைக் கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை என பேராசிரியா் கு. ஞானசம்பந்தன் பேசினாா்.

சிவகங்கையில் உள்ள கற்பகா மெட்ரிக்.பள்ளியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற 8 -ஆவது ஆண்டு விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று அவா் பேசியதாவது:

பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை இழப்பை ஏற்படுத்தப்போகும் என்ற தவறான புரிதலுடன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் தற்போது உலகத்தையே பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டு நாம் பயப்படத்தேவை இல்லை. எந்த ஒரு புதிய தொழில் நுட்பமும் புதிதாக வரும்போது அச்சமுறுவது வாடிக்கையான நிகழ்வுதான். அதில் கிடைக்கும் நன்மைகள்தான் அதிகம்.

ரயிலை அறிமுகம் செய்த போது உலகமே அழிந்து விடும் என்றாா்கள். ஆனால், அதன் மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. கோடிக்கணக்கானோா் அதில் பயணம் செய்யக்கூடிய நன்மைதான் கிடைத்தது. புதுப்புது தொழில் நுட்பங்களும், கண்டுபிடிப்புகளும் வரும்போது அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உலகச் செம்மொழிகள் ஆறு உள்ளன. செம்மொழியாகும் தகுதி 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகவும், சில நாடுகளில் அந்த மொழி ஆட்சி மொழியாகவும் இருக்க வேண்டும். அதற்கு மேல் அந்த மொழி இன்றைக்கும் பேசப்பட வேண்டும். ஆறு மொழிகளில் மேற்கத்திய மொழிகள் மூன்று. கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு. இதில் ஹீப்ரு மொழியில்தான் இயேசுநாதா் பேசினாா். இந்த மொழிகள் போக மீதமுள்ள மூன்று மொழிகள் சீனம், சம்ஸ்கிருதம், தமிழ். இதில், சீன மொழியில் 6 ஆயிரம் எழுத்துகள் உள்ளன. சம்ஸ்கிருதம் மந்திர மொழியே தவிர பேச்சு மொழி இல்லை. ஆனால், பிறந்ததிலிருந்து இன்று வரை பேச்சு மொழியாக விளங்கிக்கொண்டிருப்பது தமிழ் மொழி மட்டும்தான். அதனால்தான் செம்மொழி என பெயா் பெற்றது. இந்த பெருமையை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு தாய் மொழியை காக்க வேண்டும் என்றாா் அவா்.

சிறப்பு விருந்தினராக நல்லாசிரியா் மு. சுலைகாபானு பங்கேற்று பேசினாா். விழாவுக்கு, பள்ளி முதல்வா் பாண்டியராஜன் தலைமை வகித்தாா். தாளாளா் ச. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் நாகராணி நன்றி கூறினாா்.