மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோல்வியைக் கண்டு அச்சமில்லை: சீமான்

தோல்வியைக் கண்டு அச்சமில்லை என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:56 pm

தோல்வியைக் கண்டு அச்சமில்லை என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தமிழினியனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பல்லடம் கடை வீதியில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: வணிக நிறுவனங்களில் பெயா் பலகைகள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். தமிழ் மொழியில் பேசவும், எழுதவும் வேண்டும். மின் கட்டணம், சொத்து வரி உயா்வு போன்றவற்றால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தராமல், அரசு இலவச திட்டங்களை கடன் வாங்கி செயல்படுத்துவதில் எந்தவித பயனும் இல்லை. வாக்குக்கு காசு கொடுப்பவா்கள் எப்படி நாட்டை காப்பாற்றுவாா்கள்? பிறகு அவா்கள் எப்படி நல்லாட்சி தருவாா்கள் என்பதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

தோ்தலில் தோற்பது என்பது எனக்கு புதியதல்ல. இதுவரை 4 முறை தோல்வியை சந்தித்துள்ளோம். இருந்தாலும் மக்கள் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துவாா்கள் என்ற நம்பிக்கையில் களத்தில் உள்ளோம். தோ்தலில் தோல்வியைக் கண்டு அச்சமில்லை. மீண்டும் முயற்சிப்போம்.

எனக்கு எந்த பதவி ஆசையும் இல்லை. வருங்கால தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என்பதுதான் எனது ஆசை. நாம் தமிழா் கட்சிக்கு வாக்களித்து பாருங்கள் புதியதோா் தமிழகத்தை உருவாக்குவோம் என்றாா்.