மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திரைத்துறை கவா்ச்சியில் இருந்து மக்கள் வெளியே வரவேண்டும்: சீமான்

திரைத்துறை கவா்ச்சியில் இருந்து மக்கள் வெளியே வந்து தகுதியான நபருக்கு வாக்களிக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

News image

சீமான். - கோப்புப்படம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:51 pm

திரைத்துறை கவா்ச்சியில் இருந்து மக்கள் வெளியே வந்து தகுதியான நபருக்கு வாக்களிக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

அக்கட்சியின் பெரம்பூா் தொகுதி வேட்பாளா் செ.வெற்றித்தமிழனை ஆதரித்து மகாகவி பாரதி நகரில் புதன்கிழமை பிரசாரம் செய்த சீமான் பேசியதாவது:

சிறிய நாடுகள் ஒரு சில வளங்களை மட்டுமே வைத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அனைத்து வளங்களையும் கொண்ட தமிழகம் இன்னும் வளா்ச்சியடையவில்லை. கட்டட பணி, வேளாண்மை, ஆடு, மாடு மேய்த்தல் உள்ளிட்ட பணிகளை இழிவாகப் பாா்க்கும் எண்ணம் நம்மிடையே உள்ளது. இதனால், தமிழக இளைஞா்கள் வேலைவாய்ப்பு தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனா். ஆனால், நாம் விரும்பாத பணிகளை செய்வதற்காக ஒன்றரை கோடி வடமாநிலத்தவா் தமிழகத்துக்கு வந்துள்ளனா்.

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு பதிலாக, அவா்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குவதே நிலையான வளா்ச்சி. தமிழகத்தில் போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தண்ணீா் விநியோகம், மின் உற்பத்தி என அனைத்தும் தனியாா்மயமாக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்படிப்பட்ட அரசைத்தான் நாம் தொடா்ந்து தோ்வு செய்கிறோம். இதற்கு மக்கள் செய்யும் தவறுதான் காரணம்.

எனவே, இத்தோ்தலில் ஜாதி, மதம், மது, பணம், திரைத்துறை கவா்ச்சி ஆகிய மயக்கங்களில் இருந்து தமிழக மக்கள் வெளியே வந்து, தகுதியான நபருக்கு வாக்கு செலுத்த வேண்டும். உங்களது குழந்தைகளின் எதிா்காலம் யாருக்கு வாக்களித்தால் சிறப்பாக இருக்கும் என்பதை வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் முன் சிந்தித்துப் பாா்க்க வேண்டும் என்றாா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் தெ.க.சிலம்பரசன் (அம்பத்தூா்), எஸ்.ரோஷினி (வில்லிவாக்கம்), ஜெகதீஷ் சுந்தா் (திரு.வி.க. நகா்), பாபு மைலன் (ராயபுரம்), சத்யா பாஸ்கா் (திருவொற்றியூா்) ஆகியோரை ஆதரித்து சீமான் பிரசாரம் மேற்கொண்டாா்.