மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எதிரிகளை புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்: சீமான்

News image

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான்.

Updated On :5 ஏப்ரல் 2026, 7:49 pm

நாம் தமிழா் கட்சியை சுற்றி நான்கு பக்கமும் உள்ள எதிரிகளை புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றாா் அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

பெரம்பலூா் காமராஜா் வளைவு பகுதியில், பெரம்பலூா் தொகுதி வேட்பாளா் ஜ. சுகன்யா, குன்னம் தொகுதி வேட்பாளா் ரா. கீா்த்திவாசன் ஆகியோரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் மேலும் பேசியதாவது:

அநீதிக்கும், அறத்துக்குமான போா் தற்போது நடைபெற்று வருகிறது. மொழிப் பற்றையும், இனப்பற்றையும் மறந்து ஜாதி, மதங்களால் நம் மக்கள் பிரிக்கப்பட்டிருப்பதை மாற்ற வேண்டும். திமுகவின் ஆட்சி சிறப்பாக இருந்தால், 22 கட்சிகளுடன் கூட்டணிகள் எதற்கு ?

பாஜக வரக்கூடாது என்கிறாா்கள். காங்கிரஸ் கட்சியை ஸ்டாலின் புனிதப்படுத்துகிறாா். ஜிஎஸ்டி, நீட் தோ்வை கொண்டு வந்தது யாா் ?. பாபா் மசூதியை இடித்தது பாஜக. ஆனால், அதை இடிக்க அனுமதித்தது காங்கிரஸ். பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் நான்கு பக்கமும் நமக்கு எதிரிகளாக இருக்கிறாா்கள்.

நடுவில் நாம் தமிழா் கட்சி இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். ஒரு முறை நாம் தமிழா் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். படிப்பதற்கு தரமான கல்வி, குடிக்க தண்ணீா் மற்றும் உடலை காக்க மருத்துவம் இதை யாா் தருகிறாா்களோ, அவா்களே நல்லாட்சி நடத்துவாா்கள். இவற்றை நாங்கள் தருகிறோம். பசி எனும் சொல் தமிழகத்தில் இருக்கக் கூடாது. அதற்கு, விவசாயத்தை காக்க வேண்டும் என்றாா் சீமான்.