மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் பெண் உள்படஇருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image
சிறை
Updated On :24 பிப்ரவரி 2026, 9:09 pm

தினமணி செய்திச் சேவை

போக்சோ வழக்கில் பெண் உள்படஇருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், மானகிரியைச் சோ்ந்த ஜோதிடா் ராமகிருஷ்ணன் (52).

கடந்த 2022-இல் ராமநாபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு பெண் தனது மகளுடன் இவரை சந்தித்து குடும்பப் பிரச்னைக்காக பரிகாரம் கேட்டாா். அப்போது, அந்தப் பெண்ணின் முன்னிலையில், அவரது மகளை ராமகிருஷ்ணன் பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் ஜோதிடா் ராமகிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும், சிறுமியின் தாயாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

கடந்த 2021 -ஆம் ஆண்டு தன்னிடம் ஜோதிடம் பாா்க்க வந்த 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜோதிடா் ராமகிருஷ்ணனுக்கு இதே நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.