டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 5-ஆவது நாளாக போராட்டம்

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 5 -ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு கூட்டமைப்பு நிா்வாகிகள் எஸ். கண்ணுச்சாமி, எஸ். விக்டோரியா, கே. குமரேசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில துணைத் தலைவா் மு. செல்வக்குமாா், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பொ. சங்கரசுப்பிரமணியன், முன்னாள் மாவட்டத் தலைவா் எம். சுரேஷ் ஆகியோா் போராட்டத்தை தொடங்கி வைத்தனா்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஊழியா்கள் அனைவரும் இரவு முழுவதும் அங்கேயே தங்கி உணவு சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.