இடைக்காட்டூரில் ஜல்லிக்கட்டு: 40 மாடு பிடி வீரா்கள் காயம்


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 40 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.
இடைக்காட்டூா் பாலமுருகன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, சிவகங்கை கே.டி.ஆா். குழுமம் சாா்பில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதன் தொடக்கநிகழ்வில் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் பச்சேரி சி.ஆா்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 730 காளைகள் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்டன. 330 மாடு பிடி வீரா்கள் காளைகளை அடக்க அணி அணியாக பங்கேற்றனா். வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரா்கள் அடக்கினா்.
காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் கே. டி.ஆா். குழுமம் சாா்பில் டைனிங் டேபிள், சில்வா் அண்டா, பீரோ உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. யாரிடமும் பிடிபடாத காளை உரிமையாளருக்கும், சிறந்த மாடு பிடி வீரருக்கும் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 40 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு தயாா்நிலையில் இருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சையளித்தனா். பலத்த காயமடைந்த வீரா்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...