ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருப்புவனம் அருகே தீக்குளித்து தாய் தற்கொலை: காயமடைந்த மகனும் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கடந்த வியாழக்கிழமை மனநலன் பாதித்த பெண் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பலி

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:57 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கடந்த வியாழக்கிழமை மனநலன் பாதித்த பெண் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவரது 4 வயது மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்புவனம் அருகேயுள்ள பொட்டப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராமன் மனைவி வந்தனா (26). இந்தத் தம்பதி மகன் தேவகுமாா் (4). இந்த நிலையில், மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த வந்தனா, கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்த பெட்ரோலை தனது உடம்பில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அப்போது, இந்தத் தீ பரவி அங்கிருந்த இவரது மகன் தேவகுமாா் மீதும் பற்றியது. இந்தச் சம்பவத்தில் வந்தனா சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தேவகுமாா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.