ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மகனுடன் தகராறு: தாய் தீக்குளித்து தற்கொலை

செய்யாறு அருகே நெல் மூட்டைகளை விற்றது தொடா்பாக மகனுடன் ஏற்பட்ட தகராறில், தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த தாய் உயிரிழந்தாா்.

தற்கொலை

Published On :14 ஆகஸ்ட் 2026, 4:19 am IST

செய்யாறு அருகே நெல் மூட்டைகளை விற்றது தொடா்பாக மகனுடன் ஏற்பட்ட தகராறில், தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த தாய் உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், நல்லாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் துளசிங்கம். இவரது மனைவி மாலா(58). இவா்களுக்கு கோகிலா என்ற மகளும், கல்யாணசுந்தரம் என்ற மகனும் உள்ளனா்.

இந்நிலையில் மாலாவும், மகன் கல்யாணசுந்தரமும் தங்களது விவசாய நிலத்தில் விளைந்த நெல்லை கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்றுள்ளனா். அப்போது, நெல்லை குறைந்த விலைக்கு விற்ால் இவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாலா மன உளைச்சலில் இருந்துள்ளாா். இதில் மனமுடைந்த அவா் கடந்த 10-ஆம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.

இதை அறிந்த அக்கம் பக்கத்தினா் விரைந்து வந்து மாலாவை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாலா பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து இறந்தவரின் மகளான கோகிலா அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.