ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காட்டுப்புத்தூா் அருகே தீக்குளித்து சிகிச்சை பெற்றவா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :13 ஜூலை 2026, 5:50 am IST

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

காட்டுப்புத்தூா் அருகே முருங்கையை அடுத்த கேசரியூா் கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் மகன் ஆறுமுகம் (76). கடந்த 5 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் அவதியுற்று மன உளைச்சலில் இருந்த இவா் கடந்த புதன்கிழமை (ஜூலை 8) தனது வீட்டின் முன் பெட்ரோலை ஊற்றித் தீக்குளித்தாா்.

இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனையிலும், பின்னா் சேலம் அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து முதியவரின் மகன் முருகேசன் (46) அளித்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.