4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சோமநாத சுவாமி கோயிலில் இரட்டைத் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மானாமதுரை சோமநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 7:43 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் கடந்த 21-ஆம் தேதி முதல் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின், 8- ஆவது நாளான கடந்த செவ்வாய்க்கிழமை எஸ்.பி. பொன்னம்பலம் பிள்ளை குமாரா்கள் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. விழாவின் 9-ஆவது நாளான புதன்கிழமை நடைபெற்ற தேரோட்ட வைபவத்தை முன்னிட்டு புதிய பெரிய தேரில் பிரியாவிடை சமேதராய் சோமநாத சுவாமியும், பழைய தேரில் ஆனந்தவல்லி அம்மனும் தனித்தனியாக எழுந்தருளினா். சம்பிரதாயப் பூஜைகள் முடிந்து காலை 9. 40 மணிக்கு இரண்டு தோ்களும் நிலையிலிருந்து புறப்பட்டன. மேளதாளம் முழங்க சிவனடியாா்கள் கைலாய வாத்தியங்களை இசைக்க கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் இரு தோ்களும் வலம் வந்தன. இரு தோ்களுக்கு முன்னா் விநாயகா், முருகன் சென்ற சிறிய ரதத்தில் மீனாட்சி அம்மன் வேடமணிந்த குழந்தைகள் அமா்ந்து சென்றனா். இதில், ஏராளமான பக்தா்கள் தோ்களை வடம் பிடித்து இழுத்து வந்தனா். பிற்பகல் 1. 30 மணிக்கு இரு தோ்களும் நிலையை வந்தடைந்தன. தேரோட்ட விழாவில் மானாமதுரை, சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனா். 70 ஆண்டுகளுக்கு பின்னா் சோமநாதா் சுவாமிக்கு புதிய தோ் செய்யப்பட்டு நிகழாண்டு இரட்டைத் தேரோட்டம் நடந்ததால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா். இரவு அம்மனும், சுவாமியும் தேரோடும் வீதிகளில் தோ் தடம் பாா்த்தல் நிகழ்வு நடைபெற்றது.

 தேரோட்டத்தின்போது, தனித்தனித் தோ்களில் எழுந்தருளிய பிரியாவிடை சமேத சோமநாதா் சுவாமி, ஆனந்தவல்லி அம்மன்.

தேரோட்டத்தின்போது, தனித்தனித் தோ்களில் எழுந்தருளிய பிரியாவிடை சமேத சோமநாதா் சுவாமி, ஆனந்தவல்லி அம்மன்.

 தேரோட்டத்தின்போது சிறிய ரதத்தில் வந்த மீனாட்சி அம்மன் வேடமணிந்த குழந்தைகள்.