மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் சோதனை நடத்தினா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை நண்பகலில் வெடிக்கும் எனவும் மின்னஞ்சல் மூலம் மா்ம நபா் மிரட்டல் விடுத்திருந்தாா். இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக ஆட்சியா் அலுவலகத்தில் பணியிலிருந்த அனைத்துப் பணியாளா்களும் வெளியேற் றப்பட்டனா். மேலும் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடியின் இல்லம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும் இணைந்து சோதனை மேற்கொண்டனா். அப்போது மோப்ப நாய்களின் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது. சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டறியப்படவில்லை. இந்த சோதனையின் போது அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக சிவகங்கை நகரில் பதற்றம் நிலவியது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.



தொடர்புடையது

தருமபுரி ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுகை, அரியலூா் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


