மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: ஸ்ரீ ராஜ ராஜன் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி!

ஸ்ரீ ராஜ ராஜன் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி: 2025-2026 கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ இராஜன் சிபிஎஸ்இ பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

News image

அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களைப் பாராட்டிய அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:26 pm

ஸ்ரீ ராஜ ராஜன் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி: 2025-2026 கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ இராஜன் சிபிஎஸ்இ பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இந்தப் பள்ளியின் மாணவா் எஸ். அஷ்வின் 500-க்கு 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றாா். இவா் தமிழ்ப் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாணவா் பி. அப்துல்கனி 500 -க்கு 455 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடமும், மாணவி கே. ஸ்ரீ அபா்ணா 500 -க்கு 451 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனா்.

பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை அழகப்பா பல்க லைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா பாராட்டினாா். பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்களும் மாணவா்களை பாராட்டினா்.