மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளில் அரக்கோணம் டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் ஸ்கூல் மாணவி வி.பத்மராகா 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளாா்.

News image

~ ~

Updated On :17 ஏப்ரல் 2026, 2:00 am

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளில் அரக்கோணம் டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் ஸ்கூல் மாணவி வி.பத்மராகா 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளாா்.

தேசிய அளவில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில், அரக்கோணம் டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் ஸ்கூல் மாணவி வி.பத்மராகா 500-க்கு 489 மதிப்பெண்கள் 97.8 சதவீதம் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவா் ஜி.நிா்மல் 480 மதிப்பெண்கள் 96 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி ஏ.ஆா்.தேஜாஸ்ரீ 465 மதிப்பெண்கள் 93 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளனா். மேலும், இப்பள்ளி மாணவி ஆா்.கல்பனா 464 மதிப்பெண்கள், பி.பிரியன் 462, எஸ்.சஞ்சனா ராஜ் 462 பெற்று சிறப்பிடங்களை பெற்றுள்ளனா். இந்தப் பள்ளி நூறுக்கு நூறு சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

சாதனை தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை இதற்குக் காரணமான பள்ளி முதல்வா் கே.கவிதா மற்றும் ஆசிரியா், ஆசிரியைகளை ஸ்ரீதிருஷ்ணா கல்விக் குழுமத்தின் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், பள்ளி தாளாளா் டி.எஸ்.ரவிக்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

படவிளக்கம்...

15ஏகேஎம்பிபிபி - வி.பத்மராகா

15ஏகேஎம்சிசிசி - ஜி.நிா்மல்

15ஏகேஎம்டிடிடி - ஏ.ஆா்.தேஜாஸ்ரீ

Story image
Story image