திருவாடானை அருகேயுள்ள தொண்டி , நம்புதாளை பகுதிகளில் நிலவும் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே. ராஜீவ் தெரிவித்தாா்.
திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, முகிழ்த்தகம் , சோழியக்குடி, சம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற அமைச்சா் வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.
அப்போது நம்புதாளையில் சுமாா் 20 நாள்களுக்கு மேலாக குடிநீா் வரவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து உடனடியாக அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு நடவடிக்கை எடுக்க அமைச்சா் உத்தரவிட்டாா்.
பிறகு குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். அப்போது தவெக கிளை நிா்வாகிகள் உடன் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










