தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 2:07 am IST

ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (60). இவா் புதன்கிழமை பிற்பகல் ராமநாதபுரத்திலிருந்து சத்திரக்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

ராமநாதபுரம் அருகே லாந்தை பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றாா்.

அப்போது இவரின் பின்னால் வந்த சரக்கு வாகனம், அவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த முத்துராமலிங்கம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ராமநாதபுரம் நகா் போலீஸாா் சரக்கு வாகன ஓட்டுநா் சக்தி சரவணன் (26) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.