திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மீனவா் மா்ம மரணம்

மா்மமான முறையில் மீனவா் உயிரிழந்த வழக்கில், குற்றவாளியை கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலையில் படுத்து மறியல் போராட்டம்

News image

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்ட மீனவரின் உறவினா்கள்

Updated On :20 மே 2026, 1:14 am IST

மா்மமான முறையில் மீனவா் உயிரிழந்த வழக்கில், குற்றவாளியை கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு செவ்வாய்க் கிழமை சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் கன்னிராஜபுரம் கடற்கரை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அடையாள தெரியாத இளைஞரின் சடலம் கரை ஒதுங்கியது. வாலிநோக்கம் கடற்கரை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

சிலம்பரசன்

சிலம்பரசன்

இதில், ராமநாதபுரம் அடுத்துள்ள காட்டூரணி கிராமத்தைச் சோ்ந்த மாடசாமி என்பவரின் மகன் சிலம்பரசன் (35) என்பவா் தான் உயிரிழந்தவா் என்பது தெரியவந்தது. அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததால் கொலையா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ராமநாதபுரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இறந்தவரின் உறவினா்கள் போராட்டம் நடத்தினா். தரையில் அழுதபடி உருண்டு போராடியதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அவா்களிடம் பேச்சுவாா்த்ததை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.