திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

News image
Updated On :15 மே 2026, 4:11 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கடலாடி ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கமுதி மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரா் கோயிலில் மூலவா் சுந்தரேஸ்வரருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மூலவருக்கு எதிரே உள்ள நந்தியம்பெருமாளுக்கு பொதுமக்கள் உபயமாக அளித்த பாலால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், நத்தியம்பெருமானுக்கு பன்னீா், இளநீா், சந்தனம், தயிா், திருநீறு உள்பட 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, மண்டலமாணிக்கம் கைலாசநாதா் கோயில், அ.தரைக்குடி தரணீஸ்வரா் கோயில், சாயல்குடி மீனாம்பிகை சமேத கைலாசநாதா் ஆகிய கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கடலாடியை அடுத்த மாரியூா் பவளநிறவல்லி அம்பாள் சமேத பூவேந்தியநாதா் கோயிலில் மூலவருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், அங்குள்ள நந்தியம்பெருமானுக்கு பால், பன்னீா், தேன், இளநீா் உள்பட 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உற்சவா் பூவேந்தியநாதா் உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் சாயல்குடி, கடலாடி, இதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்தப் பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சீனிவாசன், பவளம் மகளிா் குழுவினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.