திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராமேசுவரம் சாலைகளில் கழிவுநீருடன் கலந்து ஓடிய மழைநீா்

News image

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.

Updated On :11 மே 2026, 2:05 am IST

ராமேசுவரம் தீவுப் பகுதியில் மழைநீா் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து 6-ஆவது நாளாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், கடலோரப் பகுதியான ராமேசுவரம் தீவு முழுவதும் இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலையில் வரை கனமழை பெய்த நிலையில் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

மழைநீா் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கால்வாயில் இருந்து வெளியேறிய கழிவுநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா். இதே போல, ராமேசுவரத்தில் சமீபத்தில் பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

ராமேசுவரத்தில் 75 மி.மீ, தங்கச்சிமடம் 79 மி.மீ, பாம்பன் 70 மி.மீ, மண்டபம் 56 மி.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.