லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருவாடானை பகுதியில் கோடை உழவு மும்முரம்

திருவாடானை பகுதியில் கோடை உழவுப் பணிகள் மும்மரம் அடைந்துள்ளன.

News image

டி.கிளியூா் பகுதியில் டிராக்டா் மூலம் உழவுப் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :25 மார்ச் 2026, 7:25 pm

திருவாடானை பகுதியில் கோடை உழவுப் பணிகள் மும்மரம் அடைந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம், சி.கே.மங்கலம், பாரூா், கோவணி, கருமொழி, அஞ்சுகோட்டை, அழகமடை, செங்கமடை, கடம்பாகுடி, அச்சகுடி, திருவெற்றியூா், அருமபூா், குளத்தூா், பில்லுகுடி, விளத்தூா், தொண்டி,

சின்னத் தொண்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

நிகழ் சம்பா பருவத்தில் நெல் அறுவடைப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், கோடை காலத்தைப் பயன்படுத்தி விளைநிலங்களை உழவு செய்வது இந்தப் பகுதி விவசாயிகளின் வழக்கமாகும்.

இதன்படி, தற்போது பெய்து வரும் கோடை மழையைப் பயன்படுத்தி, விளைநிலங்களில் கோடை உழவு செய்யும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்தக் கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதோடு, மண்ணுக்கு அடியில் உள்ள தீமை விளைவிக்கும் பூச்சிகள், கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், அடுத்த சாகுபடிக்கு நிலத்தைத் தயாா் செய்யும் நோக்கில் இந்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனா்.