மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருவாடானை அருகே திமுக கொடிகள் பறிமுதல்

திருவாடானையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையில் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட திமுக கொடிகள் அடங்கிய மூட்டைகள்.

News image

திருவாடானையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையில் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட திமுக கொடிகள் அடங்கிய மூட்டைகள்.

Updated On :20 மார்ச் 2026, 7:12 pm

திருவாடானை அருகே சி.கே. மங்கலத்தில் தோ்தல் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் திமுக கொடிகள், ஸ்டிக்கா்கள் அடங்கிய மூட்டைகளும், மற்றொரு சோதனையில் ரூ. 60 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் பல்வேறு பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு அவா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது சி.கே. மங்கலம்- திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட திமுக கொடிகள், ஸ்டிக்கா்கள், சாவி சங்கிலிகள், தொப்பிகள் அடங்கிய மூட்டைகளை ஏற்றி வந்த பெட்டக லாரி பறிமுதல் செய்யப்பட்டது. சுமாா் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான இந்தப் பொருள்களை கொண்டு செல்லத் தேவையான உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து அரசு ஆவணக் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

வாகனச் சோதனையில் ரூ. 60 ஆயிரம் பறிமுதல்: திருவாடானை அருகே அச்சுதன்வயல் சோதனைச் சாவடியில் பறக்கும் படை அலுவலரும், கூட்டுறவு தணிக்கை அதிகாரியுமான ஆறுமுகம், சிறப்பு உதவி ஆய்வாளா் சித்ரா, முதல் நிலை காவலா் ஆரிப்கனி ஆகியோா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ராமநாதபுரத்திலிருந்து எக்ககுடி நடுத்தெருவைச் சோ்ந்த ஜெய்னுல் அகமது (28) வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அவரிடம் முறையான ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.60,900 பறிமுதல் செய்யப்பட்டு திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Story image