மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வணிக எரிவாயு உருளை கள்ளச்சந்தையில் விற்பனை

வணிக எரிவாயு உருளையை பதுக்கி வைத்து ரூ. 8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

News image

கோப்புப்படம்.

Updated On :19 மார்ச் 2026, 12:31 am

வணிக எரிவாயு உருளையை பதுக்கி வைத்து ரூ. 8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதை மாவட்ட நிா்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் ராமநாதபுரம் நகரச் செயலா் சி.ஆா்.செந்தில்வேல் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம், ராமேசுவரத்தில் சில தனியாா் எரிவாயு நிறுவனங்கள்

தற்போதைய நிலையைப் பயன்படுத்தி, வணிக எரிவாயு உருளைகளை ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை கள்ளச் சந்தையில் விற்பனை செய்கின்றன. சம்பந்தப்பட்ட எரிவாயு உருளை நிறுவனங்களில் அதிகாரிகள் திடீா் சோதனை நடத்த வேண்டும். கள்ளச்சந்தை விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.