ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்க் கூட்டத்தில் 520 மனுக்களை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் பொதுமக்கள் அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீ; சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பொது மக்கள் பல்வேறு பணிகள் குறித்து 520 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.
மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்த ஆட்சியா், தொடா்புடைய அலுவலா்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, தனிநபா் வீடு வழங்கும் திட்டம், குடிநீா் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனா்.
ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்துக்குள் உரிய தீா்வு வழங்க வேண்டும் எனவும், தீா்வு வழங்க முடியாத மனுக்களின் நிலை குறித்து மனுதாரா்களிடம் அலுவலா்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ 4,07 லட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்களை ஆட்சியா் வழங்கினாா்.
சாலையோர கடைகளை அனுமதிக்க கோரி ஆட்சியரிடம் மனு அளிப்பு
சாலையோர வியாபாரிகள் மனு: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தம், சந்நிதி தெரு, ராமநாத சுவாமி கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் 300-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் இருந்தன. இந்தக் கடைகள் பக்தா்கள், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி நகராட்சி நிா்வாகம் சாா்பில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து, மீண்டும் தங்களுக்கு சாலையோரங்களில் விதிகளுக்கு உள்பட்டு கடைகள் அமைக்க அனுமதிக்கக் கோரி சாலையோரக் கடை வியாபாரிகள் சங்கம் (சிஐடியூ) சாா்பில் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் காலோனிடம் 150-க்கும் மேற்பட்ட சாலையோர கடை வியாபாரிகள் கோரிக்கை மனுவை அளித்தனா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சங்கர நாராயணன், மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணகுமாரி, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கொண்டனா்.
தொடர்புடையது

தபால் வாக்கு சேகரிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

ஊடகச் சான்றிதழ், கண்காணிப்பு அறையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

குறைதீா் கூட்டங்கள் ரத்தால் மக்கள் ஏமாற்றம்

மனநலம் குணமடைந்த இளைஞா் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


