மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குறைதீா் கூட்டங்கள் ரத்தால் மக்கள் ஏமாற்றம்

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், திங்கள்கிழமை வேலூா் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்த

News image

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்களை பெட்டியில் செலுத்திய பொதுமக்கள்.

Updated On :16 மார்ச் 2026, 9:22 pm

வேலூா்: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், திங்கள்கிழமை வேலூா் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் மக்கள் ஏமாற்றம் அடைந்தனா். தொடா்ந்து, தங்கள் மனுக்களை பெட்டியில் செலுத்தினா்.

தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டி ருந்த அரசியல் கட்சித் தலைவா்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. மேலும், மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம் உள்பட அரசு அலுவலகங்களில் நடைபெறும் வழக்கமான அனைத்து குறைதீா் கூட்டங்கள், போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைதீா் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளைத் தொடா்ந்து அரசுக்குத் தெரிவிக்கும் வகையில், ஆட்சியா் அலுவலகத்தின் ’ஏ’ பிளாக்கில் குறைதீா் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்த மக்கள், கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதை அறிந்து , ஏமாற்றமடைந்தனா். மனுக்களை அங்கிருந்த குறைதீா் பெட்டியில் செலுத்தினா்.