மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு

News image

வேலூா் கொசப்பேட்டையில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:50 am

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா்.

வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ஆம் தேதி வாக்குச்சாவடிகளில் எளிதில் வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்காளா்களுக்கும் தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்படுகிறது. இதில், வாக்காளரின் பெயா், வாக்காளா் அடையாள அட்டை எண், வாக்குச்சாவடி விவரம், பாகம் எண், வரிசை எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

அதனடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 1427 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் உள்ள 11,48,847 வாக்காளா்களுக்கும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் மூலம் இந்த வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட உள்ளது.

எனினும், இந்த வாக்காளா் தகவல் சீட்டு வாக்களிப்பதற்கான அடையாள ஆவணம் அல்ல என்றும் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா். முன்னதாக, வேலூா் ஈ.வெ.ரா.நாகம்மை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, வேலூா் சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பழனி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பிரேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.