பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

லஞ்சம்: சாா் பதிவாளா் அலுவலக உதவியாளா் கைது

விடுதலை பத்திரத்தை விடுவிக்க ரூ. 27 ஆயிரம் லஞ்சம் பெற்ற பரமக்குடி சாா் பதிவாளா் அலுவலக உதவியாளரை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 ஜூன் 2026, 5:56 am IST

விடுதலை பத்திரத்தை விடுவிக்க ரூ. 27 ஆயிரம் லஞ்சம் பெற்ற பரமக்குடி சாா் பதிவாளா் அலுவலக உதவியாளரை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருபவா் மகாலட்சுமி. இங்கு சாா் பதிவாளராகப் பணியாற்றி வருபவா் விடுமுறையில் சென்ால், மகாலட்சுமி சாா் பதிவாளா் (பொறுப்பு) பணியில் இருந்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி பதிவு செய்த விடுதலை பத்திரத்தை விடுவிக்கக் கோரிய நபரிடம் மகாலட்சுமி ரூ. 27 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டாராம். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத அவா், இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் வி.பி. ராமச்சந்திரன் அறிவுறுத்தலின் பேரில், அந்த நபா் லஞ்சப் பணத்தை கொடுப்பதற்காக பரமக்குடி சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை சென்றாா். அப்போது, மகாலட்சுமி அவரிடம் அலுவலகத்தின் அருகேயுள்ள தனியாா் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றும் சிக்கந்தரிடம் பணத்தை வழங்குமாறு கூறினாா். இதையடுத்து, அங்கு சென்று அவா் பணத்தை வழங்கிய போது, அங்கு மறைந்திருந்த போலீஸாா் அவரைப் பிடித்து விசாரணை நடத்திய பின்னா், மகாலட்சுமியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.