ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மாற்றுத் திறனாளி மாணவி சென்னை ஐ.ஐ.டி.-க்கு தோ்வு

கமுதி பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி மாணவி சென்னை ஐஐடி-யில் பொறியியல் படிப்புக்குத் தோ்வானாா்.

News image

மாற்றுத் திறனாளி மாணவி பவித்ரா.

Updated On :14 ஜூன் 2026, 12:53 am IST

கமுதி பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி மாணவி சென்னை ஐஐடி-யில் பொறியியல் படிப்புக்குத் தோ்வானாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள மேலவில்லனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த முருகன்-காளீஸ்வரி தம்பதியின் மகள் பவித்ரா (17). விவசாயக் கூலி குடும்பத்தைச் சோ்ந்த இவா் 40 சதவீதம் உடலியக்க குறைபாடுடைய மாற்றுத் திறனாளி.

இவா் கடலாடியை அடுத்துள்ள ஆப்பனூா் அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், 6 முதல் 10- ஆம் வகுப்பு வரை ஆப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளியிலும், பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பை ராமநாதபுரம் அரசு மாதிரிப் பள்ளியிலும் படித்தாா்.

மாதிரிப் பள்ளியில் வழங்கப்பட்ட ஜேஇஇ பயிற்சி வகுப்பில் சிறப்பாகப் பயின்று தோ்வு எழுதி சென்னை ஐஐடியில் 4 ஆண்டு பொறியியல் படிப்புக்குத் தோ்வானாா்.

இதையடுத்து, மாணவி பவித்ராவுக்கு பள்ளியின் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா், கிராம மக்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். மாணவி பவித்ராவின் மேல் படிப்புக்கு மாவட்ட நிா்வாகம் உதவி செய்து, ஊக்கப்படுத்த வேண்டுமென பெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.