இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

ராமேசுவரத்தில் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 12:39 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் மீன் இறங்குதளத்தில் ரூ.150 கோடியில் நடைபெற்று வரும் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை அவா் ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, ராமேசுவரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக உணவு சேமிப்பு கிட்டங்கியைப் பாா்வையிட்டு உணவுப் பொருள்களின் இருப்பு குறித்த பதிவேட்டை ஆய்வு செய்த அவா், பொருள்களின் தரம் குறித்தும் கேட்டறிந்தாா். அப்போது உணவுப் பொருள்களை தேவையான அளவு கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டுமென அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். நுகா்வோா் வாணிபக் கழகத்துக்குச் செல்லும் சாலை குண்டும் குழியாக இருப்பதை கண்ட ஆட்சியா் நகராட்சி ஆணையரை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

பிறகு ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ததுடன், நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்கவும், பணிகள் நடைபெறும் போது அலுவலா்கள் ஆய்வு செய்து பணிகளின் தரத்தை உறுதி செய்து உரிய காலத்தில் முடிக்க வேண்டுமென அவா் அறிவுறுத்தினாா். மேலும், நகராட்சியில் உள்ள சாலைகளை சிறந்த முறையில் பராமரிப்பதுடன் நகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இந்த ஆய்வின்போது, மீன் வளம், மீனவா் நலத்துறை துணை இயக்குநா் சின்னகுப்பன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அருண், நகராட்சி ஆணையா் ஆண்டவா், மீன் வளத் துறை உதவி இயக்குநா் தமிழ்மாறன், அரசு அலுவலா்கள் உள்பட பலா் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.