ராமேசுவரத்தில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையா் கைது
ராமேசுவரத்தில் பட்டா நிலத்தை அளந்து அளவீடு விவரங்களை கணினியில் பதிவு செய்துதர ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையா் சத்யராஜை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

சத்யா ராஜ்
ராமேசுவரத்தில் பட்டா நிலத்தை அளந்து அளவீடு விவரங்களை கணினியில் பதிவு செய்துதர ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையா் சத்யராஜை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள் கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்தவா் தனது நிலத்தின் உட்பிரிவு பட்டா நிலத்தை அளந்து அதன் குறியீடு விவரங்களைக் கணினியில் பதிவு செய்துதரக் கோரி, ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள நில அளவையா் சத்யராஜிடம் (34) விண்ணப்பித்தாா். அதற்கு நில அளவையா் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.
இதைக் கொடுக்க விரும்பாத விண்ணப்பதாரா், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அவா்களது அறிவுறுத்தலின்பேரில் வட்டாட்சியா் அலுவலகத்தில் நில அளவையா் சத்யா ராஜூவிடம் விண்ணப்பதாரா், ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை கொடுத்தாா். சத்யராஜ் அதைப் பெற்றதும், அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






