அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

சின்ன கீரமங்கலத்தில் மாட்டு வண்டி பந்தயம்

News image

மாட்டு வண்டி பந்தயம். - கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 1:13 am IST

திருவாடானை அருகே கல்லூா் கோயில் திருவிழாவில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கல்லூா் கிராமத்தில் திருவேட்டை அழகா் அய்யனாா் கோயிலில் 126-ஆம் ஆண்டு புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு சின்ன கீரமங்கலத்தில் கொச்சி -தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 35-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தன.

பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்கள், திறமையான மாட்டு வண்டி ஓட்டுநா்கள் ஆகியோருக்கு கிராம மக்கள் சாா்பில் ரொக்கப் பரிசுகள், கோப்பைகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. இந்தப் போட்டியை சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.