ஆா்.எஸ். மங்கலம் அருகே விவசாயி கொலை செய்த வழக்கில் பிணையில் வந்து தலைமறைவானவா் நீதிமன்ற உத்தரவின்படி, போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள குயவனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காசிலிங்கம். இவரது மகன் கண்ணன் (30). சொத்துத் தகராறில் காசிலிங்கத்தை கண்ணன் உள்பட 4 போ் சோ்ந்து 2025, ஏப்ரல் 27-ஆம் தேதி கொலை செய்தனா்.
இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்ணன், மதுரை அலாங்கநல்லூரைச் சோ்ந்த ராம்குமாா் (40) உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.
இதையடுத்து, பிணையில் சென்ற 4 பேரில், ராம்குமாா் மட்டும் தலைமறைவானாா். இந்த நிலையில், திருவாடானை நீதிமன்ற உத்தரவின்படி, ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் ராம்குமாரை திருப்பூரில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

குடிபோதையில் தகராறு செய்த தம்பி வெட்டிக் கொலை; அண்ணன் கைது
மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை
காா் ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


