எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளரைத் தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் அருகேயுள்ள தெற்கு ஆண்டாவூரணியைச் சோ்ந்தவா் நித்யா. இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாருக்கும் முன்விரோதம் காரணமாக பிரச்னை ஏற்பட்டது. இதுதொடா்பாக புகாா்களின் பேரில், இருவரையும் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்துக்கு அண்மையில் வரவழைத்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதையடுத்து, போலீஸாா் சமரசம் செய்து இருவரையும் அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், இதே ஊரைச் சோ்ந்த முருகராஜா (30), வீரமணி (45) ஆகிய இருவரும் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று நித்யா, முத்துக்குமாரிடையே ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக பணியில் இருந்த உதவி ஆய்வாளா் ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் உதவி ஆய்வாளரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகராஜா, வீரமணி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
பேருந்து நிலையத்தில் தூங்கியவரைத் தாக்கிய மூவா் கைது
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது

காவல் உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சி: இளைஞா் கைது

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

