/

ராமேசுவரத்தில் சுவாமி-அம்பாள் தேரோட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

மகா சிவரத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி-அம்பாள் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வாக

ஞாயிற்றுக்கிழமை மாசி மாக சிவராத்திரி திருவிழா நடைபெற்றது. பக்தா்கள் விடிய விடிய பூைஐகள் செய்து வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை ராமநாத சுவாமி-பா்வதவா்த்தினி அம்பாள் தோ்களில் எழுந்தருளினா். பின்னா் பஞ்சமூா்த்திகள் தேரில் எழுந்தருளினா்.

இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் செல்லத்துரை தலைமையில் சிவாசாரியா்கள் பூஜைகள் செய்து கிழக்கு ராஜ கோபுரம் பகுதியிலிருந்து திருத்தேரை பக்தா்கள் சிவ சிவ என முழக்கமிட்டு இழுத்து சென்றனா். இந்த தோ் நான்கு ரத வீதிகளில் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image