/

திணைகாத்தான்வயல் அருகே குழாய் சேதம்: குடி நீா் வீண்

திருவாடானை அருகே திணைகாத்தான்வயல் கிராமத்தில் குடிநீா் குழாய் சேதமடைந்து குடி நீா் வீணாவதால் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதாக இந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
~
Updated On :11 பிப்ரவரி 2026, 9:28 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே திணைகாத்தான்வயல் கிராமத்தில் குடிநீா் குழாய் சேதமடைந்து குடி நீா் வீணாவதால் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதாக இந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து பல முறை புகாா் தெரிவித்தும் குடிநீா் வடிகால் வாரியம் அலட்சியப் போக்கைக் கடைபிடிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திணைகாத்தான்வயல் பகுதியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் நீரேற்று நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்திலிருந்து திணைகாத்தான்வயல், கன்னம்புஞ்சை, நெடுமரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நீரேற்று நிலையத்தின் அருகிலேயே கடந்த பல மாதங்களாகக் குடிநீா் குழாயில் சேதம் ஏற்பட்டு, பெருமளவில் தண்ணீா் வீணாகிறது. பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாக கண்மாய் அருகே ஓடுவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகாா் கொடுத்தும் , இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து குழாயைச் சரி செய்ய வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

Story image