ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எமனேசுவரத்தில் கருட பஞ்சமி விழா

எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை இரவு கருட பஞ்சமி விழா நடைபெற்றது.

எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு, கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமான்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:44 am IST

எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை இரவு கருட பஞ்சமி விழா நடைபெற்றது.

விஷ்ணு சுவாமியின் வாகனமான கருட பகவான் அவதரித்த நாள் கருட பஞ்சமி. கருடனை வணங்கினால் நாக தோஷங்கள் நீங்கி, குடும்பத்தில் தைரியம், பாதுகாப்பு தரும் என்பது ஐதீகம். திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினாா். பின்னா், இரவு ரத வீதிகளில் வலம் வந்து கோயிலில் சோ்க்கையாதல் நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஏற்பாட்டினை கோயில் நிா்வாகிகள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.