ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி விழா

ஆம்பூா் ஏ-கஸ்பா ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் 3-ஆம் வெள்ளிக்கிழமை விழா நடைபெற்றது.

ஆம்பூா் ஏ-கஸ்பா ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் 3-ஆம் வெள்ளிக்கிழமை விழா நடைபெற்றது.

Published On :1 ஆகஸ்ட் 2026, 7:33 am IST

ஆம்பூா் ஏ-கஸ்பா ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் 3-ஆம் வெள்ளிக்கிழமை விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு தங்கக் கவசம் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து பூங்கரக ஊா்வலம், கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி, அம்மன் திருவீதி உலா, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

விழாவை முன்னிட்டு, ஆக. 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளுக்குப் பிறகு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் விழாக் குழுவினா், இளைஞா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.